Thursday, June 18, 2009

கனவுப்பாதை

பள்ளி நாட்களில்
முழு ஆண்டு விடுமுறைக்காக
நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்...

கல்லூரியில் கால்பதித்த காலத்தில்
நல்லதொரு வேலைக்காக
இறுதியாண்டை நோக்கி
வருடங்களை இழுத்துவந்தேன்

இன்று அலுவலகத்திலிருந்துதான்
இதை எழுதுகிறேன்
அடுத்துவரும் செலவுகளை நினைத்து
அடுத்த ஒன்றாம் தேதியை
எதிர்பார்கிறேனேன்று...

என் கனவுப்பதை
கண்முன்னே
கரைவதறியாமல்...

No comments: