எவருக்கு தெரியும்
என் அத்தை மகளை
சி மொழியில் பேசவைக்க
என்ற என் நண்பனின் கேள்வியில்
எனக்குள் நீ பிறந்தாய்
எஸ் எஸ் ஐ ஓய்வறையில்....
அன்ன நடையுடன் உன் தோழியும்
பின்னல் ஜடையுடன் நீயும்
ஜன்னல் வழி பார்வையிலே
என்னை விழி நோக்கியதில்
மின்னலென நீ பிறந்தாய்
மறுநாள் வரவேற்பறையில்...
நண்பனின் அறிமுகத்தில்
உறவுப்பெண் நீயல்ல
உன் தோழியென நான் அறிந்தேன்...
நான் அதுவரை
உள்ளத்தில் உற்றெடுத்து
உதட்டுவழி வரமறுத்த
வார்த்தைகளை தாள் திறந்தேன்
மறுபடியும் நீ பிறந்தாய்
பிறிதொருநாள் வகுப்பறையில்....
மூன்றுநாள் விடுமுறையில்
தொலைபேசி சிணுங்கள் வழி
தொலைவரிந்த நொடிப்பொழுதில்
தொகை அறியா முறைவரைக்கும்
தொடராக நீ பிறந்தாய்
சில்லென்று செவிப்பறையில்...
என்னோடு நீ நடந்த
கோவிலின் அடிச்சுவடுகள்,
அஞ்சலாய் நீ அனுப்பிய
அரைசேலை புகைப்படம்,
ஆயிரம்முறை நீ பிறந்தாய்
அனுதினமும் என்கனவறையில்...
இந்தனை பிறப்பை அறிந்த நான்,
ஓர் பிறப்பை மட்டும் அறியேன்.
என்னென்றால் அன்றுவரை நீ
இரகசியமாய் கருவறையில்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
விஜயன் சீனிவாசன்
No comments:
Post a Comment