Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, June 14, 2012

குருவிக் கதை

சென்னை: அதிமுக பிரமுகர்கள் இல்லத் திருமணங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்து குருவிக் கதை ஒன்றையும் சொன்னார்.

முன்னாள் எம்.பி.யும், திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் மகன் டாக்டர் பாலு-அபிநயா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் எம்எல்ஏ மகள் கவிதா-கார்த்திக், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜு மகள் வித்யா-கமல்நாத், குன்னம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்தமிழ்செல்வன் மகன் மணிவண்ணன்-சித்ரா ஆகிய 4 ஜோடிகளின் திருமணம் இன்று சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
இத்திருமணங்களை முதல்வர் ஜெயலலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். வழக்கம் போல தனது பேச்சின்போது கதை ஒன்றையும் சொன்னார். இந்த முறை அவர் சொன்னது குருவிக் கதையாகும். அந்தக் கதையைக் கேட்போமா...
திருமணம் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆனந்தமயம் ஆக்குகின்ற அழகிய நிகழ்வு. உண்மையான அன்பைப் பகிர்ந்துகொள்ள கிடைக்கின்ற அற்புதமான வாய்ப்பு. பெற்றோரைப் பிரிந்து பிறந்து வளர்ந்த சூழலையும் துறந்து திருமாங்கல்யம் அணிவிக்கின்ற அந்த நிமிடம் தொடங்கி ஒரு புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணப்பெண்ணை கண்ணின் இமையாகக் காக்க வேண்டிய பொறுப்பு மணமகனுக்கு உண்டு.

அதுபோலவே, கணவனுக்கு சிக்கல் வரும்போது விடையாகவும்; விக்கல் வரும் போது நீராகவும் மாறுகின்ற அன்பு மனம் கொண்டவளாக மணமகளும் திகழ வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் இடையிலான உறவை இனிதாக்கிக் கொள்ளல் வேண்டும்.

கடற்கரை ஓரமாக பெரிய மரம்...
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நான்கு முட்டைகளை இட்டு அடைகாத்தும் வந்தது.

ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒருநாள் பெரும் காற்று வீசியது. அலைகள் பொங்கி எழுந்தன. அப்போது கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறி கதறின.

கடல் நீரில் கூடு விழுந்த இடத்தைக் குருவிகள் சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனமுடைந்து அழுதது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நாம் காணவேண்டும் இல்லையேல் நான் உயிர் வாழமாட்டேன் என்றது.

ஆண் குருவி சொன்னது...
ஆண் குருவி சொன்னது, அவசரப்படாதே! ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத்தான் விழுந்து மூழ்கி உள்ளது. தண்ணீரில் கூட்டுடன் விழுந்ததால் முட்டைகள் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால், இந்த கடலில் உள்ள தண்ணீரை கொஞ்சம் வற்ற வைத்தால் போதும் முட்டைகளை நாம் மீட்டு விடலாம் என்றது ஆண் குருவி.

கடலை எப்படி வற்ற வைப்பது? முட்டைகள் பொறிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே, நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயலவேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துச் சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்ப வந்து, மீண்டும் நீரை எடுத்துக்கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே விடாமல் மொண்டு மொண்டு கொண்டு போய் கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர்மட்டம் குறைந்து தரை மட்டம் தெரியும். அப்போது முட்டைகள் வெளிப்படும் என்றது நம்பிக்கையோடு அந்த ஆண் குருவி.

இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்றென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக்கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டு போய் தொலைவில் கக்கின. இப்படியே நாள் முழுதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, குருவிகளின் நீரகற்றும் படலம்.

அப்போது...
அப்போது, அந்தக் கடற்கரை ஓரமாய் மகாசக்திகள் நிரம்பிய மகான் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆள் இல்லாத அந்த அத்துவானப் பகுதியில் கீச் கீச் என்ற சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் கடலுக்கு மேலே பறந்து தண்ணீரை தன் வாயின் வழியே அள்ளிச் சென்று தொலைவில் போய் உமிழ்வதைப் பார்த்தார்.

உடனே அந்த மகான் கண்களை மூடி அமர்ந்தார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்வுகளும் படம் போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும்; கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்டு தன் துணையிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்னும் ஆண் குருவியின் தவிப்பும் அவர் உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவபலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின்வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டவாறே ஆளுக்கொரு முட்டையை அன்போடு பற்றிக்கொண்டு வேறிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தன.

அப்போதே சொன்னேன் பார்த்தாயா...
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒருநாள் உழைப்பில் கடல் நீரையே குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா...? என்றது ஆண் குருவி பெருமிதமாக!

முனிவர் புன்சிரிப்போடே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார். குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால்தான். ஆனால் அந்தக் குருவிகளுக்கோ முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ தெரியாது.

அதே சமயம் குருவிகள் மட்டும் கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்! அவரை மனம் நெகிழ வைத்தது குருவிகளின் அபார முயற்சிதான்!

ஆக...
ஆக, இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளாலும்தான் முனிவராலும்தான். முனிவரின் ஆற்றல் அவற்றிற்கு பக்கபலமாக வந்து சேர்ந்தது. ஆனால் குருவிகளின் உழைப்புதான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

எனவே, நோக்கம் நியாயமானதாக இருந்து நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால் இறை அருளே பக்கபலமாக வந்து நின்று எந்த மகத்தான சாதனைகளையும் நிகழ்த்த நமக்கு உறுதுணை செய்யும் என்பதை இன்று இருகரம் பற்றி இருக்கும் மணமக்களுக்கும் சரி; இரு இலையைப் பற்றி இருக்கும் என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளுக்கும் சரி; வெற்றி நிச்சயம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Friday, January 13, 2012

What makes you think one is a good leader?

Thirukkural is a classic of 1330 couplets.  It was authored by Thiruvalluvar, a poet who is said to have lived anytime between the 2nd and 6th centuries AD. The Thirukkural expounds on various aspects of life and is one of the most important works in the Tamil language. It also covers some of the great qualities of a good leader.

Good Training
கற்க கசடறக் கற்பவை கற்றபின்               
நிற்க அதற்குத் தக. – 391
One who learns to the deepest possible and implement the lessons learned in whole of his lifetime

Business Case
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல். – 461
One who has strong business case and assesses  ROI before proceeding on it.

Risk Assessment
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. – 467
One who takes strong decisions and never regret after decision is made.

Delegation
இதனை இதனால்  இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். – 517
One who decides the right choice for right work and delegate it to them.

Assertive Communication
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. – 645
One who has assertive communication which has passed all disputes upfront

Planning
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். -675
One who considers Treasure, Instrument, Time, Deed and Place of act during planning.

Project Velocity
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. – 672
One who assesses project velocity in scrum way and keep removing the blockers

Commanding Respect
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். – 722
One who has penetrating words, and learned to execute what they learned in front of experienced

As we can see, that most verses are relevant  even in today’s modern context. So defining leadership skills again is like “reinventing the wheel”, what do you think?

Thursday, June 30, 2011

அன்பு என்றால் அம்மா, அதற்கும் மேல் நீ!!!

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என் அசைவுகள் முதல்
அனிச்சைகள் வரை
அனைத்தையும்
அறிந்திருக்க?

ஒருவேளை
என் நியூரான்கள்
நீ நினைப்பதை மட்டுமே
எடுத்து செல்கின்றனவா?

என் தமனி முழுதும்
உன் எலக்ட்ரான் முத்தமே
குருதியாய் பாய்கிறதா?

என் உயிர்க்கான
மென்பொருள்
உன் காந்த பார்வையில்
பிழையாய் நிற்கிறதா?

இவை அனைத்துக்கும்
பதில் தெரியாமல்
எத்தனையோமுறை
யோசித்திருக்கிறேன்...

ஆனால் ஒன்று மட்டும்
சொல்வேன் ...

எனக்கு
அன்பு என்றால்
அது அம்மா...

அதற்கும் மேல்
என்றால்
அது நீ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
விஜயன் சீனிவாசன்

Friday, March 11, 2011

விமர்சிக்கும் உலகம் இது!!!

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி.கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார்.

அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா?

தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

Wednesday, June 30, 2010

எளிமையாய் சொன்னேன்


என் பிறந்தநாள் வாழ்த்தே
முதன்முதலாய் இருக்க
முந்தியநாள் நள்ளிரவே
வாழ்த்து சொல்லியிருக்கிறேன்
தொலைபேசியில்...

உன் விழிகள் என்னையே
முதன்முதலாய் சந்திக்க
அதிகாலை ஐந்து மணிக்கே
உன் விடுதி வாயிலில் நின்றிருக்கிறேன்
வாழ்த்து அட்டைகளுடன்...

உன் பிறந்தநாளின்
முதல் மின்னஞ்சல்
என் கவிதையாய் இருக்க
மென்பொருளொன்று செய்திருக்கிறேன்
ஆயிரம் கவிதைகளுடன்...

இதுவரை இப்படித்தான்
உன்னை ஆச்சரியமூட்டியிருகிறேன்
என் வாழ்த்துகளால்...

இன்று உன் பிறந்தநாள்
இது என் மனைவியாக
உனக்கு முதல் பிறந்தநாள்...

எப்படி சொல்வது
என் வாழ்த்துகளை
இதுவரை இல்லாத வகையில்?
என்று எண்ணி எண்ணி
ஏதும் கிடைக்காமல்
எளிமையாய் சொன்னேன்
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..."

வாழ்த்துக்களுடன்
விஜயன் சீனிவாசன்

Tuesday, June 30, 2009

அழகாக தெரிகிறது தமிழ்...

உனக்கு வாழ்த்து
எழுதும்போது மட்டும்
அத்தனை அழகாக
தெரிகிறது தமிழ்...

உன் பெயரை
உச்சரிக்கும்போது மட்டும்
சுகமாக ஒலிக்கிறது
என் குரல்...

என்னோடு நீ
இருக்கும்போது மட்டும்
சொர்க்கமாக தெரிகிறது
இந்த உலகம்...

என்னோடு நீ
நடக்கும்போது மட்டும்
சிறியதாக குறைகிறது
சாலையின் நீளம்...

மொத்தத்தில் உனக்காக
இந்த வாழ்த்து மடல்
எழுதுவதில் என் மனம்
சந்தோசத்தில் நிறைகிறது...

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!!!

விஜயன் சீனிவாசன்

Thursday, June 18, 2009

வட்டத்தின் இரு புள்ளிகள்

நீயும் நானும்
வட்டத்தின் இரு புள்ளிகள்...
நான் சென்னையிலும்,
நீ பெங்களுரிலும் இருந்தபோது,
விட்டத்தின் இரு முனைகளில்
ஆளுக்கு ஒன்றாய் நின்றோம்...

நான் அமெரிக்கா சென்றவுடன்
நீ விட்டத்தின் முனையிலிருந்து
வட்டதின் மையத்திற்கு
இடம்பெயர் ந்தாய்...

நானும் பெங்களூர் வந்தவுடன்
என்னையும் ஈர்த்துக்கொண்டாய்
வட்டத்தின் மையத்திற்கு...

என்றுதான் இத்தனைநாள்
நினைத்திருந்தேன், அனால்
இன்றுதான் உணர்கிறேன்
நீ இருக்கும் இடத்திலேயே
இருந்துகொண்டு வெற்றிடங்கள்
அனைத்தையும்
உன் நட்புப் புள்ளிகளாலும்,
அன்புப் புள்ளிகளாலும்,
நிறப்பி இருக்கிறாய் என்று...

இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துகள்!!!

அன்புடன்,
விஜயன் சீனிவாசன்

உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும்
எத்தனையோ நண்பர்கள்
நம் அறிமுகத்திற்கு
முன்னறும் பின்னறும் ...

இருப்பினும்
நமது நட்ப்பில் மட்டும்
வித்தியாசத்தை உணர்கிறோம்
நீயும் நானும்...

இடையில் எத்தனையோ
எற்றங்கள் இறகங்கள்...
இருப்பினும்
எதுவும் மாறவில்லை,
நம் இருவருக்கும்
இடையில்...

என்ன தவம் செய்தேனென
தெரியவில்லை எனக்கு...
எததனையோமுறை கேட்டும்
சொல்லத் தெரியவில்லை உனக்கு...

ஒன்று மட்டும்
என்மனம் திரும்ப திரும்ப
என்னிடம் சொல்கிறது,
உன் நட்ப்புமட்டுமே
என்னை
ஒவ்வொரு நொடியும்
சுவாசிக்கவைக்கிறது....


என் மனமாற்ந்த நன்றிகள்
உன் பிறந்தநாளுக்கு...

இதையெல்லாம்
உன்னிடம் சொல்ல
எனக்கு ஒரு வாய்ப்பு
தந்ததற்க்கு....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

நட்புடன்,
விஜயன் சீனிவாசன்

என் இரவுகள்...

என் கனவுகளின்
தொழிற்சாலை
நீ

ஒவ்வொரு நாளும்,
அலுவலகம் விட்டு
வரும் போதும்
இன்னுமொரு
தொழிற்சாலையில் தான்
அடியெடுத்துவைக்கிறேன்.

சில மணிதுளிகள்
அன்றைய நிகழ்வுகளை
வெள்ளோட்டம் விடுவேன்
என் விழித்திரையில்.

பின்னர் தலையணை
கட்டியணைத்து...
கனவுத் தொழிற்சாலைக்குள்
மெல்ல மெல்ல நடந்து செல்வேன்...

நீ அன்று அன்போடு
வழியனுப்பி வைத்திருந்தாள்...

மாறாக,
வீடு சேர்ந்த
சில நொடிக்கெல்லாம்,
தலையணை நனைத்திருப்பேன்...
என் கண்ணீர் துளிகளால்...
நீ ஏதோ ஏசியிருந்தால்...

இப்படித்தான் நகர்கின்றன
என் இரவுகள்..

உன் நினைவுகளோடு,
விஜயன் சீனிவாசன்.

திருடி வைத்திருக்கிறேன்

உனக்காக
ஒரே முறையில்
ஒரு கவிதை
எழுதியதாக
நினைவில்லை

ஒரு நாளும்
விடுபட்ட அழைப்பு
கொடுக்காமல்
என் விழிகள்
உறக்கம்
கொண்டதாக
நியாபகம் இல்லை

இதுவரையில்
விடிந்த உடன்
உன் காலை வணக்க
குறுந்தகவல் தேட மறந்ததில்லை

தினம் தினம்
இப்படி எததனையோ
என் செயல்கள்
அணிச்சை செயல்களாக
அரும்பிக் கொண்டுள்ளன...

உன் கூந்தல் ஏறி
உதிர்ந்த பூக்கள்
எதையும்
எடுத்து வைத்து
இருக்கவில்லை நான் ...

கடைசியாக
நீ என்னை
சந்தித்த போது
கைது செய்யவில்லை
காற்றிலே
கலந்திருந்த
உன் முகப்பூச்சு
வாசணையை

ஆனாலும்
ஒன்றை மட்டும்
திருடி வைத்திருக்கிறேன்...
அது உன் இதயம்...

எங்கே வைத்திருக்கிறேன்?
என்று மட்டும்
கேட்காதே?
ஏனென்றால்
வைத்திருந்த இடத்தை
தேடதான் திருடி
இருக்கிறேன் உன்
இதயத்தை!!!

உன்னிடம் சொல்ல சொன்னார்...

இறைவா இன்னுமா
இரக்கம் வரவில்லை
உன்னக்கு?

என்னவளை இன்னும்
எத்தனை தோல்வி படிகளை
ஏற சொல்லுவாய்?
என்றேன் இறைவனிடம்...

கவலை கொல்லாதே
கண்மணியே...
நிச்சயம் ஒருநாள்
தோல்வி படிகள்
முடிந்திருக்கும்...

அன்று
நீ நிற்கும் உயரம்
அனைவரையும்
அயரவைக்கும்...
என்று சொல்ல
சொன்னார் உன்னிடம்...

உனக்காகவே,
விஜயன் சீனிவாசன்

இதோ பிறக்கப் போகிறது

இதோ
பிறக்கப் போகிறது
ஒரு பூவின்
பிறந்தநாள்
இன்னும்
சில மணிநேரத்தில்...

வாழ்த்து மடல்
தயாரிக்க
ஏதேதோ எழுதி
வாசித்துப் பார்த்தேன்...
எதுவும் ஒலிக்கவில்லை
உன் பெயரை
விட சிறப்பாக ...

இருந்தும்
இதோ
ஒரு சில வரிகள்
உனக்காகவே ...

இதுவரை
இல்லாத வகையில்
இனிதே துவங்கட்டும்
இந்த பிறந்தநாள் ...

எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உன் முயற்சிகள்யாவும் ...

என்ற வாழ்த்துகளுடன்
நிறைவு செய்ய
நினைத்தேன் ...

ரோஜாவை மட்டும்
வாழ்த்திவிட்டு ...
தோட்டக் காரர்களை
மறந்த உணர்வோடு ...
மீண்டும் தொடர்கிறேன் ...

உன் பெற்றோருக்கும்
வாழ்த்து சொல்ல ...

வாழ்த்த வயதில்லை
என்றாலும்,
நன்றிகலந்த வணக்கத்தை
தெரிவிக்க விரும்புகிறேன்..

உன்னை தோழியாக
தந்ததனால்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!!
விஜயன் சீனிவாசன்

முதல் பிறந்தநாள் வாழ்த்து

ஏதோ ஒரு மாலை வேளை
Yahoo! Chatல் உன்னை
பதிவு செய்ததாக ஞாபகம்...

Hi! என துவங்கியது
நமது உரையாடல்...

சில நிமிடங்களில் இருந்த
உரையாடல் நீளம்
இப்போது
சில மணி நேரமாக
நீண்டிருகிறது...

சிலரது நட்பை
பெற நாட்கள்
பல தேவைப்படும்...

சிலரது நட்பு
தானாக உருவாகும்...

உருவாக்கிய நட்பக்கட்டிலும்,
உருவாகிய நடப்பை
பெரிதும் மதிப்பவன்- நான்

இந்த வகையில்
உருவாகிய நடப்பு
நம் நட்பு

இதை இன்று
உன் பிறந்தநாளில்
நினைவு கூர்வதில்
நம் நட்பின் ஆழம்
நீள்வதாக உணர்கிறேன்...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
விஜயன் சீனிவாசன

இப்படித்தான் விடிந்தது இன்று

மெல்ல மெல்ல
இதையத்தை துளையிட
எங்கு கற்றுகொண்டாய்?

ஒவ்வொரு முறை
நீ அனுப்பும்
குறும் தகவல்கள்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைப்பதை
நீ அறிவாயா?


காற்றில்லாத உலகம்
உன் கனவில்லாத
உறக்கம்
இரண்டிற்கும்
வித்தியாசம்
ஏதும் தெரியவில்லை
எனக்கு.

எப்போதும் சீக்கிரம்
துயிலெழ
மறுக்கும் என் விழிகள்
இன்று
அதிகாலையிலேயே
விழித்துகொண்டது
நீ இல்லாத தூக்கம்
பிடிக்காததால்...

எழுத்தவுடன்
உன் விடுபட்ட
அழைப்பை
கண்டதும்
கலங்கிப்போனது
சந்தோசத்தால்
என் கண்கள்...

சிலமணி துளிகள்
பின்னர் மற்றுமொரு
குறும் தகவல்
ஆசை ஆசையாய்
திறந்தேன் நீ
அனுப்பியிருப்பாயென...

நண்பனின் காலை
வணக்கமது..

இப்படித்தான் விடிந்தது
இன்று எனக்கு..

2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஏதோ நேற்றுதான்
புத்தாண்டு வாழ்த்து
அனுப்பியதாக நியாபகம்
2006 க்காக...

362 நாட்கள் கடந்துவிட்டது
என்பதே இன்னுமொரு
புத்தாண்டு வரும்போதுதான்
நினைவுக்கு வருகிறது...

இடைப்பட்ட நாட்களில்
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ சாதனைகள்
உங்களை சந்த்திதிருக்கலாம்...

இனிவரும் புத்தாண்டில்
உங்களை சந்திக்க
நடுங்கட்டும் சோதனைகள்...
சட்டைப்பை பிடிக்காமல்
சிந்தட்டும் சாதனைகள்...
இவையாவும் மெய்பட
இறைவனும் துணையிருக்க
வாழ்த்துகிறேன்!!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
விஜயன் சீனிவாசன்

2006 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இதுவரை இல்லாத
ஏதோ ஒரு சிறப்பு
இந்த புத்தாண்டில்
இருபதாக உணர்கிறேன்...

முதல் முறையாக
உங்களை வாழ்த்த
ஒரு வாய்ப்பளித்ததால்...

முதல் முறையாக
இருந்தாலும் முழுமையாக
வாழ்த்த விரும்புகிறேன்...

உங்கள் கனவுகள் அனைத்தும்
வரவிருக்கும் நாட்களில்
நனவாக வேண்டுமென்று...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
விஜயன் சீனிவாசன்

உன் பிரிவில்


உனக்கு தெரியாத நான்


பொங்கல் திருநாள்


பிரிவில் ஓர் பிறந்தநாள்