Thursday, June 18, 2009

இப்படித்தான் விடிந்தது இன்று

மெல்ல மெல்ல
இதையத்தை துளையிட
எங்கு கற்றுகொண்டாய்?

ஒவ்வொரு முறை
நீ அனுப்பும்
குறும் தகவல்கள்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைப்பதை
நீ அறிவாயா?


காற்றில்லாத உலகம்
உன் கனவில்லாத
உறக்கம்
இரண்டிற்கும்
வித்தியாசம்
ஏதும் தெரியவில்லை
எனக்கு.

எப்போதும் சீக்கிரம்
துயிலெழ
மறுக்கும் என் விழிகள்
இன்று
அதிகாலையிலேயே
விழித்துகொண்டது
நீ இல்லாத தூக்கம்
பிடிக்காததால்...

எழுத்தவுடன்
உன் விடுபட்ட
அழைப்பை
கண்டதும்
கலங்கிப்போனது
சந்தோசத்தால்
என் கண்கள்...

சிலமணி துளிகள்
பின்னர் மற்றுமொரு
குறும் தகவல்
ஆசை ஆசையாய்
திறந்தேன் நீ
அனுப்பியிருப்பாயென...

நண்பனின் காலை
வணக்கமது..

இப்படித்தான் விடிந்தது
இன்று எனக்கு..

No comments: