Thursday, June 30, 2011

அன்பு என்றால் அம்மா, அதற்கும் மேல் நீ!!!

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என் அசைவுகள் முதல்
அனிச்சைகள் வரை
அனைத்தையும்
அறிந்திருக்க?

ஒருவேளை
என் நியூரான்கள்
நீ நினைப்பதை மட்டுமே
எடுத்து செல்கின்றனவா?

என் தமனி முழுதும்
உன் எலக்ட்ரான் முத்தமே
குருதியாய் பாய்கிறதா?

என் உயிர்க்கான
மென்பொருள்
உன் காந்த பார்வையில்
பிழையாய் நிற்கிறதா?

இவை அனைத்துக்கும்
பதில் தெரியாமல்
எத்தனையோமுறை
யோசித்திருக்கிறேன்...

ஆனால் ஒன்று மட்டும்
சொல்வேன் ...

எனக்கு
அன்பு என்றால்
அது அம்மா...

அதற்கும் மேல்
என்றால்
அது நீ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
விஜயன் சீனிவாசன்