Wednesday, June 30, 2010

எளிமையாய் சொன்னேன்


என் பிறந்தநாள் வாழ்த்தே
முதன்முதலாய் இருக்க
முந்தியநாள் நள்ளிரவே
வாழ்த்து சொல்லியிருக்கிறேன்
தொலைபேசியில்...

உன் விழிகள் என்னையே
முதன்முதலாய் சந்திக்க
அதிகாலை ஐந்து மணிக்கே
உன் விடுதி வாயிலில் நின்றிருக்கிறேன்
வாழ்த்து அட்டைகளுடன்...

உன் பிறந்தநாளின்
முதல் மின்னஞ்சல்
என் கவிதையாய் இருக்க
மென்பொருளொன்று செய்திருக்கிறேன்
ஆயிரம் கவிதைகளுடன்...

இதுவரை இப்படித்தான்
உன்னை ஆச்சரியமூட்டியிருகிறேன்
என் வாழ்த்துகளால்...

இன்று உன் பிறந்தநாள்
இது என் மனைவியாக
உனக்கு முதல் பிறந்தநாள்...

எப்படி சொல்வது
என் வாழ்த்துகளை
இதுவரை இல்லாத வகையில்?
என்று எண்ணி எண்ணி
ஏதும் கிடைக்காமல்
எளிமையாய் சொன்னேன்
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..."

வாழ்த்துக்களுடன்
விஜயன் சீனிவாசன்