Thursday, March 13, 2003

நன்றி செலக்டிக்கா!!

இனி
என்று சிந்திப்போம்?
என்று சிந்தித்தேன்...
அதை
இன்று நினைத்ததில்
இதயம் நனைந்தேன்...

நிச்சயம்
எல்லோர்க்கும்
சாதிக்க ஓர் நாள்
சாதகமாய் தேடிவரும்
அந்தநாள் நாம்
சந்திக்க நேரிட்டால்
பகிர்ந்து கொள்வோம்
சந்தோசத்தை...

காணாமலே
கண் மூடிப்போனால்
கடவுளிடம் மன்றாடி
வானவீதிகளில் கண்டு
கைகுலுக்கிக் கொள்வோம்...

நட்புடன்,
விஜயன் சீனிவாசன்